search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜாமீன் மனு தள்ளுபடி"

    ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் முக்கிய குற்றவாளியான அமுதவள்ளி உள்ளிட்ட 6 பேரின் ஜாமீன் மனுக்களை நாமக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் விற்பனை தொடர்பாக, விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன் மற்றும் புரோக்கர்கள் லீலா, ஹசீனா உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.



    இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் நாமக்கல் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், லீலா, ரேகா, நந்தகுமார், சாந்தி ஆகியோரின் ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
    ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் இடைத்தரகர்கள் 3 பேரின் ஜாமீன் மனுவை நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை தொடர்பாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.

    இதையடுத்து ராசிபுரத்தை சேர்ந்த விருப்ப ஓய்வுபெற்ற அரசு மருத்துவமனை செவிலியர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் இந்த குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்த ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்ட பர்வீன், நிஷா, லீலா, அருள்மணி, செல்வி என 8 பேரை ராசிபுரம் போலீசார் கைது செய்தனர்.

    இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவள்ளி, அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுனர் முருகேசன் இடைத்தரகர்களான அருள்சாமி,பர்வீன், நிஷா ஆகியோரை சி.பி.சி.ஐ.டி காவலில் எடுத்து விசாரித்தனர்.


    விசாரணையில் அவர்கள் மொத்தம் 30 குழந்தைகள் வரை விற்பனை செய்தது தெரியவந்தது.

    மேலும் இந்த கும்பலுடன் சேர்ந்து சேலம் கொல்லப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் உதவி செவிலியர் சாந்தி சேலம் பகுதியில் குழந்தைகளை வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் உள்ள இடைத்தரகர்களான அருள்சாமி, லீலா, செல்வி ஆகியோர் நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு வழக்கறிஞர்கள் மூலம் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனு நீதிபதி இளவழகன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, 3 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    இதில் லீலா ஏற்கனவே ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது 2-வது முறையாக அவரது மனு தள்ளுபடி ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
    கள்ளக்குறிச்சியில் புதிய வேனுக்கு பதிவுச்சான்றிதழ் வழங்குவதற்காக ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைதான வாகன ஆய்வாளர் ஜாமீன் மனுவை விழுப்புரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
    விழுப்புரம்:

    கள்ளக்குறிச்சியில் புதிய வேனுக்கு பதிவுச்சான்றிதழ் வழங்குவதற்காக ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு (வயது 55) என்பவரையும், அதற்கு உடந்தையாக செயல்பட்ட அவரது உதவியாளர் செந்தில்குமாரையும் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

    அதனை தொடர்ந்து இருவரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி லட்சக்கணக்கான ரூபாயை கைப்பற்றினர். மேலும் இருவருடைய வங்கி கணக்குகளையும், பாதுகாப்பு பெட்டகங்களையும் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மூலமாக போலீசார் முடக்கி வைத்தனர்.

    இதனிடையே பாபு, செந்தில்குமார் ஆகிய இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி விழுப்புரத்தில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

    இந்த மனு நீதிபதி பிரியா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வக்கீல் கவுதமன் ஆஜரானார். இவ்வழக்கு புலன் விசாரணையில் உள்ளது.

    வங்கி பாதுகாப்பு பெட்டகங்களை திறந்து ஆய்வு செய்யும் பணி நடைபெற உள்ளது. எனவே இருவருக்கும் ஜாமீன் வழங்கினால் அவர்கள் சாட்சியங்களையும், ஆவணங்களையும் கலைத்து விடக்கூடும் என்று வாதிட்டார். இதையடுத்து பாபு, செந்தில்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பிரியா உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவை துறை ரீதியாக சஸ்பெண்டு செய்து சென்னை போக்குவரத்துத்துறை ஆணையர் சமயமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
    மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
    சென்னை:

    மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சேலம்-சென்னை 8 வழிச்சாலை போராட்டத்தின் போது நடந்த தடியடி ஆகியவை குறித்து ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் பேசினார்.

    நார்வேயிலிருந்து கடந்த 9ந்தேதி பெங்களூரு விமான நிலையம் வந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர்.

    சைதாப்பேட்டை 11-வது கோர்ட்டில், ஆஜர்படுத்திய போது சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு மறுத்து விட்டார்.

    இதையடுத்து, தடையை மீறி ஊர்வலமாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த வழக்கில் ராயப்பேட்டை போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    திருமுருகன்காந்தியை சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும், அவரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை நீதிபதி செல்வம், நிர்மல்குமார் ஆகியோர் விசாரித்து, மனுவை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    அந்த உத்தரவில், திருமுருகன்காந்தி ஜாமீன் கேட்டு கீழ் கோர்ட்டை அணுகி, நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். #ThirumuruganGandhi
    மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைதான அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமீன் மனு 6-வது முறையாக இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
    மதுரை:

    அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் நிர்மலாதேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நிர்மலாதேவி உள்பட 3 பேர் பலமுறை ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டு, மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் வழக்கின் தன்மை கருதி ஜாமீன் வழங்கவில்லை.

    இந்த நிலையில் நிர்மலாதேவி, முருகன் 6-வது முறையாக ஜாமீன் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 2 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். #NirmalaDevi #NirmalaDeviCase
    மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை 5-வது முறையாக தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். #professornirmaladevi
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அவரிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையின் அடிப்படையில் காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டனர்.



    நிர்மலாதேவி ஜாமீன் வழங்கக்கோரி சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுகளில் மனுத்தாக்கல் செய்தார். இதுவரை தாக்கல் செய்யப்பட்ட 4 மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

    இந்த நிலையில் அவர் மீண்டும் ஜாமீன் கேட்டு 18-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். பேராசிரியர் முருகன் சார்பிலும் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என போலீஸ் தரப்பு ஆட்சேபம் தெரிவித்தது.

    இதையடுத்து நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். முருகனின் ஜாமீன் மனு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. #professornirmaladevi


    உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கில் கைதான வேல்முருகனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    விழுப்புரம்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்றக்கோரியும் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியை கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

    பின்னர் சுங்கச்சாவடியை அவர்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்கள். இதுதொடர்பாக வேல்முருகன் உள்பட 13 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 26-ந் தேதி வேல்முருகனை போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தனது வக்கீல் காந்தி குமார் மூலம் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 28-ந் தேதி மனுதாக்கல் செய்தார்.

    இந்த மனு விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று மதியம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சரோஜினிதேவி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். #Velmurugan
    ×